ராஜவாய்க்காலில் தேங்கிய பிளாஸ்டிக் கழிவுகளால் ஆச்சான் குளத்துக்கு தண்ணீர்வரத்து பாதிப்பு


ராஜவாய்க்காலில் தேங்கிய பிளாஸ்டிக் கழிவுகளால்  ஆச்சான் குளத்துக்கு தண்ணீர்வரத்து பாதிப்பு
x

ராஜவாய்க்காலில் தேங்கிய பிளாஸ்டிக் கழிவு மற்றும் தூர்வாரப்படாததால் ஆச்சான் குளத்துக்கு தண்ணீர் வரத்து பாதிப்படைந்துள்ளது.

கோயம்புத்தூர்


ராஜவாய்க்காலில் தேங்கிய பிளாஸ்டிக் கழிவு மற்றும் தூர்வாரப்படாததால் ஆச்சான் குளத்துக்கு தண்ணீர் வரத்து பாதிப்படைந்துள்ளது.

பருவமழை

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த ஜூன் மாதம் முதல் பெய்து வருகிறது. இதில் ஜூன் மாதத்தில் 10 மி.மீ. மழை அளவுக்கும் குறைவாக பெய்தது. அதனைத்தொடர்ந்து ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மழையை ஒட்டிய பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதுடன், நொய்யல் ஆற்றில் மழைவெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

நொய்யல் ஆற்று தண்ணீர் வாய்க்கால்கள் மூலம் குளங்களுக்கு திருப்பி விடப்பட்டு உள்ளன. இதன்காரணமாக கோவை வேடப்பட்டி புதுக்குளம், கோளராம்பதி குளம், குறிச்சி குளம், உக்குளம், நரசாம்பதி குளம், செங்குளம், பேரூர் பெரிய குளம் உள்பட 10-க்கும் மேற்பட்ட குளங்கள் நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது. நொய்யல் ஆற்றில் நேற்று வினாடிக்கு 150 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இதனால் புட்டுவிக்கி தடுப்பணை, சுண்ணாம்பு காளவாய் உள்ளிட்ட தடுப்பணைகளில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீரில் இளைஞர்கள், சிறுவர்கள் குளித்து மகிழ்கின்றனர்.

ஆச்சான் குளம்

இந்த நிலையில் நொய்யல் ஆற்றில் வெள்ளம் கரைபுண்டு ஓடிய போதிலும் ஆச்சான் குளத்திற்கு செல்லும் ராஜவாய்க்காலில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாததால் அந்த குளத்திற்கு தண்ணீர் செல்ல முடியாத நிலை உள்ளது. இந்த தண்ணீர் வரத்து பாதிக்கப்பட்ட நிலை குறித்து ஆச்சான் குளம் பாதுகாப்பு இயக்க நிர்வாகி பாணு கூறியதாவது:-

பட்டணம்புதூர் அணைக்கட்டில் இருந்து ஆச்சான் குளத்திற்கு ராஜவாய்க்கால் மூலம் ஆச்சான் குளத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. இந்த வாய்க்கால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வீடுகள் கட்டுப்பட்டு உள்ளதுடன், தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் பிளாஸ்டிக் கழிவுகள் வாய்க்காலில் குவிந்து காணப்படுகின்றன. இதனால் தண்ணீர் செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றி குளத்திற்கு தண்ணீர் கொண்டு செல்ல அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

கோவையில் பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்) விபரம்:-

சிங்கோனா-30, சின்னக்கல்லாறு-54, வால்பாறை பி.ஏ.பி.-56, வால்பாறை தாலுகா-52, சோலையாறு-35, கோவை தெற்கு-6, பெரியநாயக்கன்பாளையம்-21.40.


Next Story