நம்பியூர் அருகே மழை காரணமாக கீழ்பவானி வாய்க்காலில் மண் அரிப்பால் கரையில் சேதம் சீரமைப்பு பணி தீவிரம்


நம்பியூர் அருகே மழை காரணமாக கீழ்பவானி வாய்க்காலில் மண் அரிப்பால் கரையில் சேதம் சீரமைப்பு பணி தீவிரம்
x
தினத்தந்தி 18 Oct 2023 2:56 AM IST (Updated: 18 Oct 2023 2:58 AM IST)
t-max-icont-min-icon

நம்பியூர் அருகே மழை காரணமாக கீழ்பவானி வாய்க்காலில் மண் அரிப்பால் கரையில் சேதம் அடைந்தது. சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஈரோடு

நம்பியூர் அருகே உள்ள குருமந்தூர் மோளபாளையம் வழியாக கீழ்பவானி வாய்க்கால் செல்கிறது.இங்குள்ள வாய்க்கால் பாலத்துக்கு (26-வது மைல்) அருகே நேற்று முன்தினம் இரவு பெய்த மழை காரணமாக வாய்க்காலின் இடது கரையில் மண் அரிப்பு ஏற்பட்டது. இதனால் வாய்க்கால் கரை சேதம் அடைந்தது.வாய்க்காலில் வினாடிக்கு 2 ஆயிரத்து 300 கன அடி தண்ணீர் சென்றால் கரையில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகும் அபாயம் ஏற்பட்டது. உடனே இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பொதுப்பணித்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பொக்லைன் எந்திரம் மூலம் வாய்க்கால் கரையை சீரமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.


Next Story