பிச்சிப்பூ வரத்து குறைந்ததால் விலை உயர்ந்தது
தோவாளை மார்க்கெட்டில் பிச்சிப்பூ வரத்து குறைந்ததால் விலை உயர்ந்து கிலோ ரூ.1,500-க்கு விற்பனையானது.
ஆரல்வாய்மொழி,
தோவாளை மார்க்கெட்டில் பிச்சிப்பூ வரத்து குறைந்ததால் விலை உயர்ந்து கிலோ ரூ.1,500-க்கு விற்பனையானது.
பூ மார்க்கெட்
ஆரல்வாய்மொழி அருகே உள்ள தோவாளையில் பிரசித்தி பெற்ற பூ மார்க்கெட் உள்ளது. இங்கு குமரி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.
பூக்களின் விலை ஏறி இறங்கும் தன்மையுடையது. பூக்களின் வரவை பொறுத்தும் மக்களின் தேவையை பொறுத்தும் விலையில் மாற்றம் ஏற்படும்.
இந்தநிலையில் நேற்று சிலவகை பூக்களின் விலை உயர்ந்து காணப்பட்டது.
நேற்று முன்தினம் கிலோ ரூ.1,350-க்கு விற்கப்பட்ட பிச்சி பூ நேற்று ரூ.150 உயர்ந்து கிலோ ரூ.1,500-க்கு விற்பனையானது. இதுபோல் நேற்று முன்தினம் ரூ.1,300-க்கு விற்கப்பட்ட முல்லை நேற்று ரூ.1,400-க்கு விற்பனையானது.
வரத்து குறைவு
விலை உயர்வுக்கான காரணம் குறித்து பூ வியாபாரி ஒருவர் கூறும்போது, தோவாளை பூ மார்க்கெட்டில் பூக்களின் வரத்து குறைவாக இருந்தது. அதாவது தினமும் சுமார் 1½ டன் பிச்சி பூ விற்பனைக்காக வரும். ஆனால், இன்று (அதாவது நேற்று) ½ டன் பூக்களே விற்பனைக்கு வந்தது. இதனால் விலை உயர்ந்து காணப்பட்டது' என்றார்.
தோவாளை மார்க்கெட்டில் நேற்று விற்பனையான பூக்களின் விலை விவரம் கிலோவில் வருமாறு:-
அரளி பூ ரூ.160, மல்லிகை ரூ 650, சம்பங்கி ரூ.350, கனகாம்பரம் ரூ.300, வாடாமல்லி ரூ.80, துளசி ரூ.30, தாமரை ஒரு எண்ணம் ரூ.5, கோழிபூ ரூ.80, பச்சை ஒரு கட்டு ரூ.8, ரோஸ் பாக்கெட் ரூ.20, பட்டன்ரோஸ் ரூ.120, ஸ்டெம்புரோஸ் (ஒரு கட்டு) ரூ.200, மஞ்சள் கேந்தி ரூ.80, சிவப்புக்கேந்தி ரூ.80, சிவந்தி மஞ்சள் ரூ.250, சிவந்தி வெள்ளை ரூ.300, கொழுந்து ரூ.60, மருக்கொழுந்து ரூ.80 என விற்பனையானது.