ஈரோடு காய்கறி மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து குறைந்ததால் விலை உயர்வு- கிலோ ரூ.30-க்கு விற்பனை


ஈரோடு காய்கறி மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து குறைந்ததால் விலை உயர்வு- கிலோ ரூ.30-க்கு விற்பனை
x

ஈரோடு காய்கறி மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து குறைந்ததால் விலை உயர்ந்து நேற்று ஒரு கிலோ தக்காளி ரூ.30-க்கு விற்பனை ஆனது.

ஈரோடு

ஈரோடு காய்கறி மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து குறைந்ததால் விலை உயர்ந்து நேற்று ஒரு கிலோ தக்காளி ரூ.30-க்கு விற்பனை ஆனது.

தக்காளி விலை உயர்வு

ஈரோடு வ.உ.சி. பூங்காவில் நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு 700-க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் உள்ளன. தாளவாடி, ஒட்டன்சத்திரம், ஒசூர் மற்றும் கர்நாடகா மாநிலத்தின் ஒரு சில பகுதிகளில் இருந்தும் தக்காளி ஈரோடு மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

கடந்த சில நாட்களாக தக்காளி வரத்து அதிகமாக இருந்ததால் ஒரு கிலோ ரூ.10 முதல் ரூ.20 விரை விற்பனை ஆனது. இதனால் இல்லத்தரசிகள் தக்காளியை கிலோ கணக்கில் வாங்கிச்சென்றனர். வீடுகளில் தக்காளி பயன்பாடு அதிகமாக இருந்தது.

ரூ.30-க்கு விற்பனை

ஈரோடு மார்க்கெட்டுக்கு வழக்கமாக 8 ஆயிரம் முதல் 9 ஆயிரம் வரை தக்காளி பெட்டிகள் விற்பனைக்கு வரும். இந்தநிலையில் நேற்று தக்காளி வரத்து குறைந்தது. வெறும் 5 ஆயிரம் தக்காளி பெட்டிகளே வரத்தனாது. இதனால் தக்காளி விலை கிலோவுக்கு ரூ.10 வரை உயர்ந்துள்ளது. மொத்த விற்பனையில் 15 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி ரூ.250-க்கும், 27 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி ரூ.450-க்கும் விற்பனையானது.

இதேபோல் மார்க்கெட்டில் உள்ள கடைகளில் சில்லரை விலையில் ஒரு கிலோ தக்காளி ரூ.25 முதல் ரூ.30 வரை விற்பனை செய்யப்பட்டது. வரத்து தொடர்ந்து குறைந்தால் வரும் நாட்களில் மேலும் தக்காளி விலை உயர வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

காய்கறி விலை விவரம்

இதேபோல் ஈரோடு நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட்டில் நேற்று விற்பனையான காய்கறி விலை கிலோவில் வருமாறு:-

கேரட் -ரூ.40, பீன்ஸ் -ரூ.120, உருளைக்கிழங்கு -ரூ.40, கத்தரிக்காய் -ரூ.30, கொத்தவரங்காய் -ரூ.35, அவரை (பட்டை) -ரூ.70, அவரை (கருப்பு) -ரூ.120, முள்ளங்கி -ரூ.50, முருங்கைக்காய் -ரூ.90, சேனைக்கிழங்கு -ரூ.60, கருணைக்கிழங்கு -ரூ.55, முட்டைகோஸ் -ரூ.15, வெள்ளை பூசணி -ரூ.20, மஞ்சள் பூசணி -ரூ.20.


Next Story