வரத்து குறைவால் வாழைத்தார் விலை கிடுகிடு உயர்வு


வரத்து குறைவால் வாழைத்தார் விலை கிடுகிடு உயர்வு
x

வரத்து குறைவால் கரூரில் வாழைத்தார் விலை கிடுகிடு உயர்ந்துள்ளது.

கரூர்

வாழை மண்டி

கரூர் ெரயில் நிலையம் அருகே வாழை மண்டி செயல்பட்டு வருகிறது. இந்த வாழை மண்டிக்கு நாமக்கல் மாவட்டம் மோகனூர், காட்டுப்புத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும், கரூர் மாவட்டம், லாலாபேட்டை, மாயனூர், கிருஸ்ணராயபுரம், வாங்கல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் புவன், ரஸ்தாளி, கற்பூரவள்ளி உள்ளிட்ட வாழைத்தார்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. செவ்வாழைப்பழங்கள், மோரிஸ் பழ வகைகள் ஈரோடு மாவட்டம் கோபியில் இருந்தும், வேலூரில் இருந்தும் விவசாயிகள் வாகனங்களில் கொண்டு வருகின்றனர்.தேனி, போடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் வாழைத்தார்கள் கொண்டுவரப்படுகின்றன. இவ்வாறு கொண்டு வரப்படும் வாழைத்தார்கள் நாள் தோறும் ஏலம் விடப்படுகிறது. அதில் கரூர் மாவட்டம் முழுவதும் இருந்து வாழை வியாபாரிகள் கலந்து கொண்டு வாழைத்தார்களை வாங்கி செல்கின்றனர். இவ்வாறாக கடந்த பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் வாழை மண்டியில் வரத்து குறைவால் விலை உயர்ந்து காணப்பட்டது.

விலை உயர்வு

இது குறித்து கரூர் வாழை மண்டி வியாபாரிகள் கூறியதாவது:-தற்போது பூவன்வாழை தார் ஒன்று ரூ.500-க்கும், ரஸ்தாளி ரூ.500-க்கும், பச்சை நாடான் ரூ.400-க்கும், கற்பூரவள்ளி ரூ.600-க்கும், செவ்வாழை பழம் ஒன்று ரூ.8 முதல் ரூ.9 வரைக்கும் விற்பனை செய்யப்படுகிறது. தற்போது வாழைத்தார்கள் அதிகவிளைச்சல் இருந்தும், காற்று அதிகமாக வீசுவதாலும், முகூர்த்தங்கள் இல்லாததாலும் வரத்து குறைந்துள்ளது. இதனால் வாழைத்தார்கள் விலை அதிகரித்துள்ளது, இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியாக உள்ளனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story