கால்வாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை அகற்றாததால் சாலைகளில் கழிவுநீர் வழிந்து ஓடும் அவல நிலை


கால்வாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை அகற்றாததால் சாலைகளில் கழிவுநீர் வழிந்து ஓடும் அவல நிலை
x

ஆரணி நகரில் கால்வாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை அகற்றாததால் சாலைகளில் கழிவுநீர் வழிந்து ஓடும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

திருவண்ணாமலை

ஆரணி

ஆரணி நகரில் கால்வாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை அகற்றாததால் சாலைகளில் கழிவுநீர் வழிந்து ஓடும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

தூய்மை பணி

ஆரணி நகரில் 33 வார்டுகள் உள்ளன. 1-வது வார்டு முதல் 18-வது வார்டு வரை தனியார் தூய்மை பணியாளர்களைக் கொண்டு நகர் முழுவதும் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மீதமுள்ள 19-வது வார்டு முதல் 33-வது வார்டு வரை நகராட்சி நிரந்தர பணியாளர்களை கொண்டு தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நகரில் தூய்மை பணியாளர்கள் வீடு வீடாக சென்று மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து கேட்டு வாங்கி செல்கின்றனர்.

ஆனால் கால்வாய்களை முறையாக தூர்வாருவதில்லை.

இது சம்பந்தமாக பலமுறை நகரமன்ற உறுப்பினர்கள், நகரமன்ற தலைவரிடமும், ஆணையாளரிடமும் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

கால்வாய்களில் அடைப்பு

இந்த நிலையில் நேற்று இரவு திடீரென சுமார் அரை மணி நேரம் கன மழை ெபய்தது. இதனால் நகரில் பல்வேறு பகுதிகளில் கால்வாய்களில் ஏற்பட்ட அடைப்பின் காரணமாக சாலைகளில் கழிவுநீர் வழிந்து வீடுகளுக்குள் செல்லும் அவல நிலை ஏற்பட்டது.

இன்று காலை ஆரணி கொசப்பாளையம் 18-வது வார்டு பங்களா தெருவில் கழிவுநீர் சுமார் 100 மீட்டருக்கு சாலைகளில் வழிந்து நின்றது.

இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் நகரமன்ற உறுப்பினரிடமும், பக்கத்து வார்டில் உள்ள நகரமன்ற உறுப்பினர் வீட்டிற்கு சென்று பொதுமக்கள் கூறினர்.

இதையடுத்து நகரமன்ற உறுப்பினர்களின் கணவர்கள் நகரமன்ற தலைவருக்கும், நகராட்சி ஆணையாளருக்கும் கழிவுநீர் சாலையில் தேங்கி உள்ளதை உடனடியாக செல்போன் மூலம் புகைப்படம் எடுத்து அனுப்பி வைத்தனர்.

அதன்பேரில் சுகாதார தனி அலுவலர் மோகனசுந்தரம், சுகாதார ஆய்வாளர் ராமச்சந்திரன், பணி மேற்பார்வையாளர் சரவணகுமார் மற்றும் களப்பணியாளர்களுடன் சென்று அப்பகுதியில் உள்ள கால்வாய்களில் உள்ள அடைப்புகளை அகற்றும் பணியை மேற்கொண்டனர்.

பின்னர் சாலையில் நின்றிருந்த கழிவுநீர் அனைத்தும் வழிந்து ஓடியது

ஆனால் சாலையில் தூய்மைப் பணி மேற்கொள்ளாததால் துர்நாற்றம் வீசியது.

இது சம்பந்தமாக பொதுமக்கள் நகரமன்ற உறுப்பினர்களிடம் புகார் தெரிவித்தனர்.


Next Story