குப்பைக்கிடங்கில் தீ


குப்பைக்கிடங்கில் தீ
x
தினத்தந்தி 10 Jun 2023 12:45 AM IST (Updated: 10 Jun 2023 12:45 AM IST)
t-max-icont-min-icon

செம்பட்டியில் குப்பைக்கிடங்கில் மர்ம நபர்கள் தீ வைத்தனர்.

திண்டுக்கல்

செம்பட்டி பகுதியில் குடியிருப்புகள், வணிக வளாகங்கள் மற்றும் பஸ் நிலையத்தில் சேகரிக்கப்படும் குப்பைகள், கழிவுகளை ஆத்தூர் ஒன்றிய அலுவலகம் அருகே உள்ள சாலையோரத்தில் குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று இந்த குப்பை கிடங்கில் யாரோ மர்ம நபர்கள் தீ வைத்து சென்றனர். அந்த தீ மளமளவென பரவி குப்பைகள் பற்றி எரிந்தது. இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. தீ அணைக்கப்படாததால் மாலை வரை தொடர்ந்து எரிந்து கொண்டே இருந்தது. அந்த பகுதியில் உள்ள ஒன்றிய அலுவலகம், நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் பணிபுரிபவர்கள் மற்றும் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டனர். இந்த பகுதியில் சாலையோரம் குப்பை கொட்டி தீ வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Related Tags :
Next Story