ஆடிப்பெருக்கையொட்டி கோத்தகிரி மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை
ஆடிப்பெருக்கையொட்டி கோத்தகிரி மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றன.
கோத்தகிரி: ஆடி மாதம் அம்மனுக்கு வழிபாடு செய்ய உகந்த மாதமாக கருதப்படுகிறது. இந்த நிலையில் நேற்று ஆடிப்பெருக்கையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதேபோல் கோத்தகிரி கடைவீதியில் உள்ள பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள், ஆடி மாத முதல் நாளான கடந்த ஜுலை 17-ந் தேதியன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து ஆடிப்பெருக்கு நாளான நேற்று காலை மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடத்தப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து சென்றனர். இதைத்தொடர்ந்து கோத்தகிரி பகுதியில் உள்ள அம்மன் கோவில்களில் ஆடி மாத 3-வது வெள்ளிக்கிழமை மற்றும் சங்கடஹர சதுர்த்தியான இன்றும், வருகிற 11-ந்தேதி கடைசி வெள்ளிக்கிழமையன்றும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், ஊஞ்சல் வழிபாடு ஆகியவை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.