இரவு நேரங்களில்பவானிசாகர் அணை பகுதியில் யானைகள் நடமாட்டம்


இரவு நேரங்களில்பவானிசாகர் அணை பகுதியில் யானைகள் நடமாட்டம்
x

இரவு நேரங்களில் பவானிசாகர் அணை பகுதியில் யானைகள் நடமாடுகிறது.

ஈரோடு

பவானிசாகர்

பவானிசாகர் அணையையொட்டி உள்ள வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் அதிகமாக வசித்து வருகின்றன. இந்த யானைகள் தினமும் மாலை நேரத்தில் வனப்பகுதியில் இருந்து வெளியேறி அணையின் நீர்த்தேக்க பகுதிக்கு தண்ணீர் குடிக்க வருகின்றன. அவ்வாறு வரும் யானை கூட்டம் மீண்டும் வனப்பகுதிக்குள் செல்லாமல் இரவு முழுவதும் விடிய விடிய பவானிசாகர் அணையின் மேல் பகுதியில் நடமாடிக் கொண்டிருக்கிறது.

இதனால் தினமும் அதிகாலை நேரத்தில் அணையின் நீர்த்தேக்க பகுதியில் மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் பீதி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து பவானிசாகர் வனத்துறை வனச்சரகர் சிவகுமார் கூறுகையில், 'அணையின் மேல்பகுதியில் யானைகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. எனவே மீனவர்கள் மற்றும் அணையையொட்டி உள்ள கிராமங்களுக்கு செல்லும் பொதுமக்கள் மற்றும் அணையின் மேல் பகுதி வழியாக செல்லும் பொதுமக்கள், அணை நீர்த்தேக்க பகுதியில் மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் கவனமாக செல்ல வேண்டும்,' என எச்சரித்து உள்ளார்.

1 More update

Next Story