கோடை விடுமுறையையொட்டிதிருச்செந்தூர் கோவிலில் குவிந்த பக்தர்கள்


தினத்தந்தி 5 Jun 2023 12:15 AM IST (Updated: 5 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கோடை விடுமுறையையொட்டி ஞாயிற்றுக்கிழமை திருச்செந்தூர் கோவிலில் பக்தர்கள் குவிந்து புனித நீராடி சாமிதரிசனம் செய்தனர்.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

கோடை விடுமுறையையொட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குவிந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

கோடை விடுமுறை

முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள்.

சுட்டெரிக்கும் வெயில் காரணமாக பள்ளிக்கூடங்களுக்கு கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டதாலும், வார விடுமுறை தினம் என்பதாலும் நேற்று திரளான பக்தர்கள் குடும்பத்துடன் கோவிலில் குவிந்தனர்.

நீண்ட வரிசையில் நின்று தரிசனம்

கோவிலில் நேற்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தீபாராதனை, உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. காலையில் உச்சிகால அபிஷேகம், தீபாராதனை, மாலையில் சாயரட்சை தீபாராதனை, தொடர்ந்து மற்றகால பூஜைகள் நடந்தது.

அதிகாலை முதலே கடலில் புனித நீராடிய பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று சாமி தரிசனம் செய்தனர்.

இலவச பொதுதரிசனம் மற்றும் ரூ.100 கட்டண தரிசனத்தில் பல மணி நேரம் காத்திருந்து வழிபட்டனர்.


Next Story