வாகன சோதனையின் போதுபோலீசாரை ஹெல்ெமட்டால் தாக்கிய சகோதரர்கள் கைது
வாகன சோதனையின் போது போலீசாரை ஹெல்ெமட்டால் தாக்கிய சகோதரர்கள் கைது செய்யப்பட்டார்கள்.
மதுரை
மதுரை அரசு ஆஸ்பத்திரி பகுதியில் மதிச்சியம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, மோட்டார் சைக்கிளில், வந்த 2 வாலிபர்களை மடக்கினர். அவர்கள் போலீசாரிடம் இருந்த தப்பித்து செல்ல முயன்றனர். மேலும், தங்களை பிடிக்க வந்த போலீசாரை, ஹெல்மெட்டால் தாக்கி விட்டு அங்கிருந்து தப்பிக்க முயன்றனர். அப்போது, மற்ற போலீசார் உதவியுடன் அந்த வாலிபர்களை மடக்கி பிடித்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில், அவர்கள் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த பிரவீன்குமார் (வயது 27), அவரது சகோதரர் நவீன்குமார் (24) என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவர்கள் இருவரையும் மதிச்சியம் போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story