பாஞ்சாலி அம்மன் கோவிலில் துரியோதனன் படுகளம்


பாஞ்சாலி அம்மன் கோவிலில் துரியோதனன் படுகளம்
x

மேல்மலையனூர் அருகே பாஞ்சாலி அம்மன் கோவிலில் துரியோதனன் படுகளம் திரளான பக்தர்கள் தரிசனம்

விழுப்புரம்

விழுப்புரம்

மேல்மலையனூர் அருகே உள்ள சிறுதலைப்பூண்டி கிராமத்தில் பழமைவாய்ந்த பாஞ்சாலி அம்மன் கோவில் உள்ளது. இங்கு கடந்த 25-ந் தேதி அலகு நிறுத்தல் மற்றும் கொடி ஏற்றத்துடன் அக்னி வசந்த விழா தொடங்கியது. இதையொட்டி தினமும் காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், பிற்பகல் மகாபாரத சொற்பொழிவும், இரவில் நாடகமும் நடைபெற்று வருகின்றன.

விழாவின் சிகர நிகழ்ச்சியான துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதை முன்னிட்டு மந்தைவெளியில் பிரம்மாண்டமான துரியோதனன் சிலை வடிவமைக்கப்பட்டு அதன் மீது வண்ணப் பொடிகள் தூவப்பட்டது,மேலும் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.பின்பு 18-ம் நாள் தெருக்கூத்து நடத்தப்பட்டு பீமன் வேடமணிந்த ஒருவர் துரியோதனன் சிலையின் தொடைப்பகுதியில் கதாயுதத்தால் ஓங்கி அடித்தார். அந்த இடத்தில் இருந்து சிவப்பு நிற திரவம் வடிந்தது. அதை பாஞ்சாலி வேடமணிந்தவர் எடுத்து தனது கூந்தலிலும், பாஞ்சாலி அம்மன் சிலையில் உள்ள கூந்தலிலும் தடவி கூந்தலை முடிந்தனர்.

பின்பு துரியோதனன் சிலையை மூன்று முறை வலம் வந்தவுடன் அம்மனுக்கு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.


Next Story