திரவுபதி அம்மன் கோவிலில் துரியோதனன் படுகளம்
புதுப்பட்டு கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது.
ராணிப்பேட்டை
காவேரிப்பாக்கத்தை அடுத்த புதுப்பட்டு கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில் கடந்த 9-ந் தேதி மகாபாரத அக்னி வசந்தபெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் கடைசி நாளாக துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் கட்டைக்கூத்து கலைஞர்கள் துரியோதனன், பீமன் வேடமிட்டு துரியோதனன் படுகள காட்சியை நடித்துக்காட்டினர். இதைத்தொடர்ந்து நேற்று மாலை தீமிதி திருவிழா நடைபெற்றது. இதில் 200-க்கும் மேற்பட்ட பக்தர்கள் விரதமிருந்து தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
Related Tags :
Next Story