மணியம்பாடியில் 3 கிராம மக்கள் சார்பில் தசரா திருவிழா தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்


மணியம்பாடியில் 3 கிராம மக்கள் சார்பில் தசரா திருவிழா தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
x
தினத்தந்தி 24 Oct 2023 7:45 PM GMT (Updated: 24 Oct 2023 5:12 PM GMT)

மணியம்பாடியில் 3 கிராம மக்கள் சார்பில் தசரா திருவிழா கொண்டாடினர். இதையொட்டி பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

கிருஷ்ணகிரி

தேன்கனிக்கோட்டை

தேன்கனிக்கோட்டை அருகே உள்ள மணியம்பாடி கிராமத்தில் மழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும் கிராம தேவதைகளுக்கு திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு தசரா திருவிழாவையொட்டி மணியம்பாடியில் உள்ள கிராம தேவதைகளான பசுவேஸ்வர சாமி, மல்லேஸ்வர சாமி, வீரபத்திர சாமி, பட்டாளம்மன், ஓம்காளியம்மன், மாரியம்மன், மேலூர் கிராமத்தில் உள்ள சிக்கம்மா, தொட்டம்மா, சனி மாத்மா, வெங்கடராம சாமி, ஒட்டர்பாளையம் கிராமத்தில் உள்ள பெருமாள் திம்மராய சாமி, சென்றாயசாமி, வீரபத்திர சாமி ஆகிய சாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் மேள, தாளங்கள் முழங்க ஊர்வலமாக மணியம்பாடி கிராமத்திற்கு பக்தர்கள் சாமிகளை எடுத்து வந்தனர்.

அப்பகுதியில் உள்ள கோவில் திடலில், சாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. தொடர்ந்து மரங்களின் கிளைகளை எடுத்து வந்து பூஜைகள் செய்து அதில் தேங்காய்களை கட்டி அம்பு விடும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. பின்னர் பக்தர்கள் தலை மீது தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் தரிசனம் செய்தனர்.


Next Story