வெண்டிபாளையம் குப்பைக்கிடங்கில் தீ
வெண்டிபாளையம் குப்பைக்கிடங்கில் தீ
ஈரோடு
சோலார்
ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட வெண்டிபாளையம் பகுதியில் 13 ஏக்கர் பரப்பளவில் குப்பை கிடங்கு உள்ளது. இங்கு ஈரோடு மாநகரில் சேகரமாகும் குப்பைகளை டிராக்டர் மூலம் அள்ளி வந்து ஓரிடத்தில் குவித்து வைப்பது வழக்கம். மேலும் குப்பை கிடங்கில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரிப்பதுடன், குப்பைகளிலிருந்து உரம் தயாரிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் நேற்று மாலை குப்பை கிடங்கு திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் ஈரோடு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் குப்பை மீது தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story