டி.வி.எம். சேவா பாலம் அமைப்பு சார்பில் நலத்திட்ட உதவிகள்; சிறப்பு தபால் தலை வெளியீடு


டி.வி.எம். சேவா பாலம் அமைப்பு சார்பில் நலத்திட்ட உதவிகள்; சிறப்பு தபால் தலை வெளியீடு
x

டி.வி.எம். சேவா பாலம் என்ற சமூக சேவை அமைப்பின் பயனாளிகள் விழா சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள ரஷ்யன் கலாசார மையத்தில் நேற்று நடைபெற்றது.

சென்னை

விழாவை டாக்டர் வடிவேல் முகுந்தன் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். விழாவுக்கு சமூக சேவகர் ஜி.வரதராஜன் தலைமை தாங்கினார். விழாவில் சைதாப்பேட்டை குற்றவியல் நடுவர் மன்ற மாஜிஸ்திரேட் ஆர்.வேல்ராஜ் கலந்துகொண்டு இந்த அமைப்பின் 25-வது ஆண்டு நிறைவு விழா தபால் தலையை வெளியிட்டார்.

பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி. அரசு பொதுத்தேர்வில் முதல் 2 இடங்களை பெற்ற மாணவ-மாணவிகளுக்கு தங்கம்-வெள்ளி விருதுகள் வழங்கப்பட்டன. பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு கல்வி ஊக்கத் தொகை, 'பேக்', மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனங்கள், ஆதரவற்ற ஏழை-எளிய பெண்கள் 10 பேருக்கு தையல் எந்திரங்கள் வழங்கப்பட்டன. பல்வேறு சாதனையாளர்களுக்கும் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது. சிறப்பு விருந்தினர்களாக டாக்டர் நெல்லையப்பர், தொழில் அதிபர்கள் பாலமுருகன், பிரபாகர், கிருஷ்ணா, எம்.பி. கணபதி, எம்.முருகேசன், என்.ஸ்ரீதர், ராஜ்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

முன்னதாக டி.வி.எம். சேவா பாலம் அமைப்பின் நிறுவனர் மா.இருளப்பன் வரவேற்றார். செயலாளர் எஸ்.பெஞ்சமின் நன்றி கூறினார். நிகழ்ச்சியை இலக்கிய அணி தலைவர் ஆர்.முருகையா தொகுத்து வழங்கினார். விழா ஏற்பாடுகளை இந்த அமைப்பின் நிர்வாகிகள் மாரிமுத்து, ராகவன், தியாகராஜன், சுபாஷ், வேல்ராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.


Next Story