மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்


மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
x

நெல்லையில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.

திருநெல்வேலி

நெல்லை மின்பகிர்மான வட்டத்துக்கு உட்பட்ட கிராமப்புற கோட்டத்திற்கான மின்நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம், பாளையங்கோட்டை தியாகராஜநகரில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடந்தது. நெல்லை மின்பகிர்மான வட்ட மேற்பார்வை மின்பொறியாளர் சந்திரசேகரன் தலைமை தாங்கினார். அவர் மின்நுகர்வோர் வழங்கிய மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி கிராமப்புற செயற்பொறியாளர் (பொறுப்பு) ஆஷா மற்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். கூட்டத்தில் கிராமப்புற கோட்டத்துக்கு உட்பட்ட அனைத்து மின்பொறியாளர்களும் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story