மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்


மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
x
தினத்தந்தி 17 Oct 2023 12:15 AM IST (Updated: 17 Oct 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சீர்காழியில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது.

மயிலாடுதுறை

சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தமிழ்நாடு மின்சார வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை (புதன்கிழமை) காலை 10:30 மணி அளவில் மாவட்ட மேற்பார்வை பொறியாளர் ரவி தலைமையில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் சீர்காழி மின் கோட்டத்திற்குட்பட்ட சீர்காழி, கொள்ளிடம், மாதானம், அரசூர், பூம்புகார், காளி, மணல்மேடு, வைத்தீஸ்வரன்கோயில், தரங்கம்பாடி, செம்பனார்கோயில், ஆக்கூர், திருக்கடையூர், கிடாரங்கொண்டான், திருவெண்காடு ஆகிய பிரிவு அலுவலகத்தை சார்ந்த பகுதிகளில் உள்ள மின் உபயோகிப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு மின்சாரம் சம்பந்தப்பட்ட குறைகளை தெரிவித்து பயன்பெறலாம். இந்த தகவலை செயற்பொறியாளர் லதா மகேஸ்வரி தெரிவித்தார்.

1 More update

Next Story