மின் நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம்


மின் நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம்
x

கல்லிடைக்குறிச்சியில் மின் நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது.

திருநெல்வேலி

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் நெல்லை மின் பகிர்மான வட்டத்தில் கல்லிடைக்குறிச்சி கோட்டத்தில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு நெல்லை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை மின் பொறியாளர் குருசாமி தலைமை தாங்கினார். அவர் மின் நுகர்வோர்களின் குறைகளை உடனடியாக நிவர்த்தி செய்ய கல்லிடைக்குறிச்சி மின்வினியோக செயற்பொறியாளர் சுடலையாடும் பெருமாள் மற்றும் மற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த நிகழ்ச்சியில் நெல்லை மின் பகிர்மான வட்ட செயற்பொறியாளர் (பொது) வெங்கடேஷ் மணி மற்றும் கல்லிடைகுறிச்சி கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து மின் பொறியாளர்களும் கலந்து கொண்டனர்.


Next Story