ஊட்டி கோர்ட்டில் இ-தாக்கல் மையம்
ஊட்டி கோர்ட்டில் இ-தாக்கல் மையத்தை நீதிபதி திறந்து வைத்தார்.
நீலகிரி
ஊட்டி
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற வளாகம் செயல்பட்டு வருகிறது. இங்கு மையப்படுத்தப்பட்ட இ-தாக்கல் மையம் திறப்பு விழா நடைபெற்றது. இந்த மையத்தை மாவட்ட நீதிபதி அப்துல் காதர் தலைமை தாங்கி திறந்து வைத்தார். இந்த இ-தாக்கல் மையம் மூலமாக வக்கீல்கள் தங்களது வழக்குகளை https://efiling.ecourts.gov.in/tn என்ற இணையதளம் மூலம் தாங்கள் இருக்குமிடத்தில் இருந்தே மனு தாக்கல் செய்து கொள்ளலாம். மேலும் https://pay.ecourts.gov.in/epay மூலம் வழக்கிற்கான நீதிமன்ற கட்டணங்களை செலுத்தலாம். இந்த நிகழ்ச்சியில் நீதிபதிகள் ஸ்ரீதரன், ஸ்ரீதர், மோகன கிருஷ்ணன், தமிழினியன், நீலகிரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் லிங்கம் மற்றும் வக்கீல்கள் சங்க தலைவர் மகாதேவன், செயலாளர் சிவக்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story