முஸ்லிம் ஐக்கிய பேரவை அலுவலகத்தில் இ-சேவை மையம்; அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்


முஸ்லிம் ஐக்கிய பேரவை அலுவலகத்தில் இ-சேவை மையம்; அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 24 Dec 2022 6:45 PM GMT (Updated: 24 Dec 2022 6:45 PM GMT)

காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய பேரவை அலுவலகத்தில் இ-சேவை மையத்தை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்.

தூத்துக்குடி

ஆறுமுகநேரி:

காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய பேரவை அலுவலகத்தில் இ-சேவை மையத்தை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்.

இ-சேவை மையம்

காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய பேரவையின் அலுவலகத்தில் அரசு இ-சேவை மையம் திறப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பேரவையின் தலைவர் எம்.கே முகைதீன் தம்பி என்ற துரை காக்கா தலைமை தாங்கினார். துணைத் தலைவர்கள் தாஜூதீன், முகமது இஸ்மாயில், முன்னாள் ஐக்கிய பேரவை தலைவர் அபுல் ஹசன் கலாமி, செயற்குழு உறுப்பினர் கலிலூர் ரகுமான், ஐக்கிய பேரவையின் பொருளாளர் முகமது உமர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயற்குழு உறுப்பினர் முகமது ஆதம் சுல்தான் வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினராக அமைச்சர் அனிதா ஆர். ராதா கிருஷ்ணன் கலந்துகொண்டு இ- சேவை மையத்தினை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பின்னர் இ-சேவையின் முதல் பணியை தொடங்கி இஸ்லாமிய பெண் ஒருவருக்கு சாதி சான்றிதழை வழங்கினார்.

சிறுபான்மை மக்களுக்கான அரசு

அப்போது அவர் பேசுகையில், "முதல்வரின் தனி கவனத்தில் காயல்பட்டினம் நகராட்சி உள்ளது. காயல்பட்டினத்தில் அடிப்படை தேவைகளை நிறைவேற்றி தருவதற்கு அரசு தயாராக உள்ளது. சிறுபான்மை மக்களின் நலனுக்காக இந்த அரசு செயல்படுகிறது" என்றார்.

நிகழ்ச்சியில் முஸ்லிம் ஐக்கிய பேரவையின் துணை செயலாளர் நவாஸ் அகமது, காயல்பட்டினம் நகர்மன்ற தலைவர் கே.ஏ.எஸ்.முத்து முகமது ஆகியோர் பேசினார்கள். பேரவையின் பொது செயலாளர் வாவு எம்.எம்.சம்சுதீன் நன்றி கூறினார்.

நிகழ்ச்சியில் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தின் தலைவர் உமரி சங்கர், மாவட்ட தி.மு.க. இளைஞரணி செயலாளர் ராமஜெயம், ஆழ்வார்திருநகரி யூனியன் தலைவர் ஜனகர், திருச்செந்தூர் ஒன்றிய தி.மு.க. செயலாளர் செங்குழி ரமேஷ், தூத்துக்குடி யூனியன் முன்னாள் தலைவர் வி.பி.ஆர். சுரேஷ், காயல்பட்டினம் நகரசபை துணை தலைவர் சுல்தான் லெப்பை உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story