அருள்புரத்தில் இ-சேவை மையம்


அருள்புரத்தில் இ-சேவை மையம்
x

அருள்புரத்தில் இ-சேவை மையம்

திருப்பூர்

அருள்புரம்

பல்லடம் அருகே கரைப்புதூர் ஊராட்சியில் தொழில் நிறுவனங்கள், சாய ஆலைகள் உள்ளிட்ட ஏராளமான தொழில் நிறுவனங்கள் உள்ளன. இந்த ஊராட்சியில் 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் தொகை உள்ளது. அருகில் உள்ள கணபதிபாளையம் ஊராட்சியில் 40 ஆயிரம் மேற்பட்ட மக்கள் தொகை உள்ளது. இந்த இரண்டு ஊராட்சிகளை சேர்ந்தவர்கள் கணபதிபாளையத்தில் உள்ள இ- சேவை மையம், கரைப்புதூர் ஊராட்சி மற்றும் கணபதிபாளையம் ஊராட்சி கூட்டுறவு சங்க கட்டிடத்தில் செயல்பட்டு வந்த இ-சேவை மையத்தை பயன்படுத்தி வந்தார்கள். கடந்த ஓராண்டுகளுக்கு மேலாக இந்த இ-சேவை மையம் செயல்படுவதில்லை. இ-சேவை மையம் செல்ல வேண்டும் என்றால் கலெக்டர் அலுவலகத்துக்கு அல்லது பல்லடத்திற்குத்தான் செல்லும் நிலை உள்ளது. இதனால் 2 ஊராட்சிக்கு உட்பட்ட பொதுவான இடமான அருள்புரத்தில் பொது இ- சேவை மையம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

----------


Next Story