நிர்ணயிக்கப்பட்ட இலக்கைவிட அதிக விவசாய சாகுபடி


நிர்ணயிக்கப்பட்ட இலக்கைவிட அதிக விவசாய சாகுபடி
x

ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்த ஆண்டு விவசாயத்தில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கைவிட அதிகம் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது.

ராமநாதபுரம்

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்த ஆண்டு விவசாயத்தில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கைவிட அதிகம் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது.

நல்ல விளைச்சல்

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை நன்றாக பெய்தது. அதிக மழை பெய்ததால் வைகை அணையில் இருந்து திறந்து விடப்பட்ட உபரிநீர் பெரும்பாலும் கடலில் சென்று கலந்து வீணானது. அனைத்து நீர்நிலைகளிலும் நீர்நிறைந்து காணப்பட்டதால் விவசாயிகள் நெல், பருத்தி, மிளகாய், பயறுவகைகள் விவசாயம் செய்து நல்ல விளைச்சல் கண்டு உள்ளனர்.

இதன்படி விவசாயத்துறையினர் இந்த ஆண்டு 1 லட்சத்து 25 ஆயிரத்து 500 எக்டேர் நெல்விவசாயம் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டதில் 1 லட்சத்து 36 ஆயிரத்து 135 எக்டேர் விவசாயம் செய்து 108 சதவீதம் இலக்கு எட்டப்பட்டு உள்ளது.

நிர்ணயம்

இதேபோல, தினை பயிர்கள் 12 ஆயிரத்து 600 எக்ேடர் இலக்கு நிர்ணயித்து 8 ஆயிரத்து 756 எக்ேடர் மட்டுமே இலக்கை எட்டி 69 சதவீதம் மட்டுமே விளைந்து உள்ளது. 4 ஆயிரத்து 600 எக்ேடர் பருப்பு வகைகள் இலக்கு நிர்ணயிக்கப் பட்டு 5 ஆயிரத்து 728 எக்ேடர் சாகுபடி செய்யப் பட்டுள்ளது. இது 125 சதவீதம் ஆகும்.

இதுதவிர, 6 ஆயிரத்து 500 எக்ேடர் பருத்தி சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 9 ஆயிரத்து 352 எக்ேடர் பருத்தி சாகுபடி செய்து சாதனை படைக்கப்பட்டு உள்ளது. இது 144 சதவீதம் ஆகும். ராமநாதபுரம் மாவட்ட வரலாற்றில் அதிக அளவாக கிலோ ரூ.125 என பருத்தி விலை போய் உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

விளைபொருட்கள்

கரும்பு 200 எக்டேர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 143 எக்டேர் விளைந்துள்ளது. இது 72 சதவீதம் ஆகும். இதேபோல, எண்ணெய் வித்துக்கள் 6 ஆயிரத்து 700 எக்ேடர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 4 ஆயிரத்து 782 எக்ேடர் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. இது 71 சதவீதம் ஆகும். ஒட்டுமொத்தமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் 1 லட்சத்து 56 ஆயிரத்து 100 எக்ேடரில் விவசாய சாகுபடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டதில் 1 லட்சத்து 63 ஆயிரத்து 905 எக்டேர் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. இது 106 சதவீதமாகும். இதனால் மாவட்டத்தின் விவசாய விளைபொருள்களின் உற்பத்தி அதிகரித்து உள்ளதுடன் விவசாயிகளின் வருவாயும் உயர்ந்துள்ளது.


Next Story