ஏரல் பெட்ரோல் பங்க்கில் எரிபொருள் அளவு சோதனை முகாம்
ஏரல் பெட்ரோல் பங்க்கில் எரிபொருள் அளவு சோதனை முகாம்
தூத்துக்குடி
ஏரல்:
ஏரல் சினிமா தியேட்டர் பின்புறம் உள்ள எஸ்.எம். பீயூல்ஸ் இந்துஸ்தான் பெட்ரோலியம் பங்க்கில் எரிபொருள் அளவு மற்றும் தரம் பரிசோதனை முகாம் நடந்தது. இந்த முகாமிற்கு தூத்துக்குடி மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ஸ்வர்ணலதா தலைமை தாங்கி பரிசோதனை முகாமை தொடங்கி வைத்தார். ஏரல் பேரூராட்சி தலைவர் சர்மிளாதேவி மணிவண்ணன் முன்னிலை வகித்தார். முகாமில் வாடிக்கையாளர்கள் முன்னிலையில் எரிபொருள் தரம் பரிசோதனை நடத்தப்பட்டும், வாடிக்கையாளர்களின் பெட்ரோல் சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஏரல் எஸ்.எம். பியூல்ஸ் டீலர் பிரவீனா, சுரேஷ் காந்தி, தூத்துக்குடி பகுதி செயலாளர் சிவக்குமார், ஏரல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க துணைத் தலைவர் மணிவண்ணன் உள்பட வாடிக்கையாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story