ஏரல் அரசு பள்ளியில்மாணவிகளுக்கு இலவச சைக்கிள்


ஏரல் அரசு பள்ளியில்மாணவிகளுக்கு இலவச சைக்கிள்
x
தினத்தந்தி 2 Aug 2023 6:45 PM GMT (Updated: 2 Aug 2023 6:45 PM GMT)

ஏரல் அரசு பள்ளியில் மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

தூத்துக்குடி

ஏரல்:

ஏரல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு ஏரல் பேரூராட்சி தலைவர் சர்மிளாதேவி மணிவண்ணன் தலைமை தாங்கி 91 மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார். பள்ளி தலைமை ஆசிரியை விஜிலா மேரி, பெற்றோர் ஆசிரியர் கழக துணைத் தலைவர் பாக்கர் அலி, பொருளாளர் பிரிசில்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் சித்திரா, பொன்னம்மாள், விமலா ராணி, சிந்தாசிராஜூதீன் மற்றும் மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.


Next Story