மண் அள்ளிய டிராக்டர் பறிமுதல்
மண் அள்ளிய டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது.
ராமநாதபுரம்
திருவாடானை,
திருவாடானை தாலுகா மங்கலக்குடி அருகே ஊரணிக்கோட்டை கண்மாய் பகுதியில் அனுமதியின்றி சவடு மண் அள்ளப்படுவதாக திருவாடானை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி, பழங்குளம் குரூப் கிராம நிர்வாக அலுவலர் ஜேசுதாஸ், உதவியாளர் பாரதி ஆகியோர் அப்பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது குருந்தங்குடி முத்துப்பாண்டி(வயது 28) என்பவர் டிராக்டரில் சவடு மண் அள்ளிக்கொண்டிருந்தது தெரியவந்தது.
அதனை தொடர்ந்து போலீசார் குருந்தங்குடி கிராமத்தை சேர்ந்த முத்துப்பாண்டி (வயது 28) என்பவரை கைது செய்து, மண் அள்ள பயன்படுத்திய டிராக்டரை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story