மண் அள்ளிய டிராக்டர் பறிமுதல்


மண் அள்ளிய டிராக்டர் பறிமுதல்
x
தினத்தந்தி 24 Sept 2023 12:15 AM IST (Updated: 24 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மண் அள்ளிய டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது.

விருதுநகர்

ராஜபாளையம்,

ராஜபாளையம் அருகே இளந்திரைகொண்டான் பெரியகுளம் கண்மாய் பகுதியில் மண் அள்ளுவதாக வந்த தகவலையொட்டி வட்டாட்சியர் ராமச்சந்திரன், வருவாய் ஆய்வாளர் முத்துமாணிக்கம் ஆகியோர் அப்பகுதி வழியாக வந்த டிராக்டரை சோதனை செய்தனர். அப்போது அனுமதி இல்லாமல் 1 யூனிட் மண் அள்ளி வந்தது தெரிந்தது. பின்னர் டிரைவர் டிராக்டரை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். மேலும் மண் மற்றும் டிராக்டர் வண்டியை பறிமுதல் செய்து தளவாய்புரம் போலீசில் ஒப்படைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அதேபோல மேலூர் துரைசாமிபுரம் களத்தூர் கண்மாயில் 1 யூனிட் மண் அள்ளி வந்த டிராக்டரை வருவாய் ஆய்வாளர் காளீஸ்வரி பறிமுதல் செய்தனர். டிராக்டர் வண்டியை சேத்தூர் போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்து டிராக்டர் உரிமையாளர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story