மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம்


மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 4 July 2023 4:04 PM IST (Updated: 5 July 2023 3:42 PM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சி.ஐ.டி.யு.) சார்பில் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்களை அடையாளம் கண்டு நிரந்தரம் செய்யக்கோரி மனு கொடுக்கும் போராட்டம் நேற்று காலை திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன் நடைபெற்றது. திட்ட தலைவர் பாபு தலைமை தாங்கினார்.

திருப்பூர்

மின்வாரிய தொழிற்சங்கங்களுடன் கடநத 22-2-2018 அன்று போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி 6-1-1998 முதல் இன்று வரை பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களை அடையாளம் கண்டு நிரந்தரம் செய்ய வேண்டும். காலியாக உள்ள கள உதவியாளர் பணியிடங்களில் ஒப்பந்த ஊழியர்களை தினக்கூலி அடிப்படையில் நியமித்து நிரந்தரம் செய்ய வேண்டும். பல ஆண்டுகளாக பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களை தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் நிரந்தரம் செய்வோம் என முதல்-அமைச்சர் அறிவித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் ரங்கராஜன், மாநில துணைத் தலைவர் நாகராஜன் ஆகியோர் கோரிக்கைகள் குறித்து பேசினார்கள். இதில் திருப்பூர், பல்லடம், உடுமலை பகுதியை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் திரளானவர்கள் கலந்துகொண்டனர். முடிவில் திட்ட பொருளாளர் மோகன்தாஸ் நன்றி கூறினார். பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் 376 ஒப்பந்த தொழிலாளர்களின் கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர்.


Next Story