பெண் குழந்தைகள் பாதுகாப்பு கலந்தாய்வு கூட்டம்


பெண் குழந்தைகள் பாதுகாப்பு கலந்தாய்வு கூட்டம்
x

பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த கலந்தாய்வு கூட்டம் நடந்தது.

அரியலூர்

தா.பழூர்:

அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட மன்றத்தில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு கலந்தாய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார் முன்னிலை வகித்தார். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அணி உறுப்பினர் ஜெயகாந்தி கலந்து கொண்டு குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் அரசின் நலத்திட்டங்கள் குறித்த கருத்துகளை வழங்கினார்.

இந்த கூட்டத்தில் பெண் குழந்தைகளை பாலியல் குற்றங்களில் பாதிக்கப்படாமல் தடுப்பது, குழந்தை திருமணத்தை முன்கூட்டியே தடுத்து நிறுத்துவது, குழந்தைகள் கடத்தல், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவுகள் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பது குறித்து பெற்றோரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த முகாம் நடத்த திட்டமிடப்பட்டது. மேலும் பெண் குழந்தைகள் மற்றும் குற்ற சம்பவங்களில் இருந்து பெண்களை பாதுகாக்கும் வகையில் காவல் உதவி செயலியை அனைத்து தரப்பு மக்களையும் பயன்படுத்த வைப்பது குறித்து எடுத்துக் கூறப்பட்டது. இந்த கூட்டத்தில் தா.பழூர் ஊராட்சி மன்ற தலைவர் கதிர்வேல், கிராம நிர்வாக அலுவலர் அய்யப்பன், வட்டார வளமைய மேற்பார்வையாளர் சுதா, அரசு மேல்நிலைப்பள்ளி உதவி தலைமை ஆசிரியர் ஆனந்தகுமார், வட்டார கல்வி அலுவலக ஊழியர் திருமாவளவன், கிராம சுகாதார செவிலியர் மகாலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story