ரெயில் விபத்து எதிரொலி.. சென்னை சென்ட்ரலில் இருந்து செல்லும் விரைவு ரெயில்கள் நிறுத்தம்


ரெயில் விபத்து எதிரொலி.. சென்னை சென்ட்ரலில் இருந்து செல்லும் விரைவு ரெயில்கள் நிறுத்தம்
x

விபத்து எதிரொலியாக மதுரை-கான்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

திருவள்ளூர்,

மைசூரில் இருந்து பீகார் மாநிலம் தர்பங்காவுக்கு பாக்மதி விரைவு ரெயில் சென்றுகொண்டிருந்தது. திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அருகே ரெயில் வந்துகொண்டிருந்தபோது, அங்கு ஏற்கெனவே நின்றுகொண்டிருந்த சரக்கு ரெயிலின் பின்னால் வேகமாக வந்து மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

வேகமாக மோதியதால் ரெயில் பெட்டிகள் தடம் புரண்டு 2 பெட்டிகள் எரிந்து வருகின்றன. பயணிகள் விரைவு ரெயிலின் 4 ஏசி பெட்டிகள் தடம் புரண்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள், போலீசார் மற்றும் உள்ளூர்வாசிகள் சம்பவ இடத்திகு விரைந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த விபத்து காரணமாக சென்னை சென்ட்ரலில் இருந்து டெல்லி செல்லும் தமிழ்நாடு விரைவு ரெயில், தன்பந்த் விரைவு ரெயில் ஆகியவை நிறுத்தப்பட்டுள்ளன. அதேபோல் மதுரை-கான்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இரவு 11.35 மணிக்கு புறப்பட வேண்டிய மதுரை-கான்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் அதிகாலை 2.30 மணிக்கு புறப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.


Next Story