ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி இன்று மேல்முறையீடு ?


ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி  இன்று மேல்முறையீடு ?
x

ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து ஈ.பி.எஸ் தரப்பு இன்று மேல்முறையீடு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

சென்னை,

எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பொதுக்குழு கூட்டத்துக்கு தடை கோரி ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில் சென்னை ஐகோர்ட்டு நேற்று காலை 11.30 மணிக்கு தீர்ப்பு வழங்கியது இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் பிறப்பித்தார் அதில், அ.தி.மு.க வின் ஜூன் 23 ந்தேதிக்கு முந்தைய நிலையே நீடிக்க வேண்டும். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து தான் பொதுக்குழு, செயற்குழுவை கூட்ட வேண்டும். தனி கூட்டம் கூட்டக் கூடாது. பொதுக்குழு கூட்ட ஆணையரை நியமிக்க வேண்டும்" என்று உத்தரவிட்டுள்ளார் கோர்ட்டின் தீர்ப்பை அடுத்து ஓ.பன்னீர் செல்வம் இல்லத்தில் அவரது ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர்.

இந்த நிலையில் அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து ஈ.பி.எஸ் தரப்பு இன்று மேல்முறையீடு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.சட்ட வல்லுனர்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.


Next Story