எடப்பாடி பழனிசாமி பிறந்தநாள் விழா
சின்னசேலம், மணம்பூண்டி எடப்பாடி பழனிசாமி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
சின்னசேலம்:
சின்னசேலம் நகர அ.தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமி பிறந்தநாள் விழா பஸ் நிலையத்தில் கொண்டாடப்பட்டது. விழாவிற்கு சின்னசேலம் நகர செயலாளர் ராகேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் உமாஜெயவேல் முன்னிலை வகித்தார். கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான இரா.குமரகுரு கலந்துகொண்டு ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கினார். விழாவில் கள்ளக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ. செந்தில்குமார், சின்னசேலம் கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், மேற்கு ஒன்றிய செயலாளர் அய்யம்பெருமாள், சின்னசேலம் நகரம் மற்றும் ஒன்றிய அ.தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக சின்னசேலம் ஆஞ்சநேயர் கோவிலில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பெயரில் அர்ச்சனை மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
மணம்பூண்டி
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி பிறந்தநாள் விழா மணம்பூண்டியில் கொண்டாடப்பட்டது. இதற்கு கள்ளக்குறிச்சி மாவட்ட வர்த்தக அணி செயலாளரும், முன்னாள் முகையூர் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளருமான ஆர்.சீனிவாசன் தலைமை தாங்கினார். முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் ஆர்.குரு என்கிற விஜயசரண் அனைவருக்கும் இனிப்பு வழங்கினார். கிளை செயலாளர் கணேசன், முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் மகாராஜன், எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் குமாரசாமி, கிளை செயலாளர் சேகர், முன்னாள் மாவட்ட பிரதிநிதி ஆறுமுகம், பாசறை செயலாளர் ஏழுமலை, நிர்வாகி ஜெய்சங்கர், ஒன்றிய இலக்கிய அணி பொருளாளர் ரஞ்சித்குமார், முன்னாள் கிளை செயலாளர் ஹரிகிருஷ்ணன், நிர்வாகிகள் முரளி, செந்தில் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தேவனூர் கிளை செயலாளர் சங்கர் நன்றி கூறினார். முன்னதாக மணம்பூண்டியில் உள்ள அ.தி.மு.க. நிறுவன தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எம்.ஜி.ஆரின் முழு உருவ சிலைக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ஆர்.சீனிவாசன் அ.தி.மு.க.வினருடன் ஊர்வலமாக சென்று மாலை அணிவித்தார்.