மழை பாதிப்புகளை எடப்பாடி பழனிசாமி இன்று ஆய்வு


மழை பாதிப்புகளை எடப்பாடி பழனிசாமி இன்று ஆய்வு
x
தினத்தந்தி 16 Nov 2022 12:15 AM IST (Updated: 16 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறை மாவட்டத்தில் மழை பாதிப்புகளை எடப்பாடி பழனிசாமி இன்று ஆய்வு

மயிலாடுதுறை

திருவெண்காடு:

சீர்காழி பகுதியில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு பெய்த கனமழை காரணமாக ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது. பாதித்த பகுதிகளை தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும், அ.தி.மு.க .இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி இன்று (புதன்கிழமை) மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி நிவாரண உதவிகளை வழங்குகிறார். இதற்கான ஏற்பாடுகளை முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் எம்.எல்.ஏ., மாவட்ட செயலாளர் பவுன்ராஜ், மாவட்ட அவை தலைவர் பாரதி உள்பட கட்சி நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.


Next Story