ரூ.500 பல்பிற்கு ரூ.5,000 என பில் போட்டது எடப்பாடி பழனிசாமி அரசு - அமைச்சர் பெரியகருப்பன் தாக்கு


ரூ.500 பல்பிற்கு ரூ.5,000 என பில் போட்டது எடப்பாடி பழனிசாமி அரசு - அமைச்சர் பெரியகருப்பன் தாக்கு
x

தூய்மை இயக்கத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்க்கவே விளம்பரம் என அமைச்சர் பெரியகருப்பன் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை,

"நம்ம ஊரு சூப்பர்" இயக்க விளம்பர பேனர் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் புகாருக்கு அமைச்சர் பெரிய கருப்பன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

ஒரு பேனருக்கு ரூ.7,906 செலவு என கூறுவது முற்றிலும் தவறு. ஒரு பேனருக்கு ரூ.611 மட்டுமே செலவு செய்யப்பட்டது.

ஒரே ஒரு தனியார் நிறுவனத்திற்கு பேனர் அச்சிட ஆணை வழங்கப்பட்டதாக கூறுவது தவறு. விளம்பர பேனர் அச்சிடும் பணிகளில் எந்த ஒரு தனியார் நிறுவனமும் ஈடுபடுத்தப்படவில்லை. தூய்மை இயக்கத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்க்கவே விளம்பரம்.

அதிமுக ஆட்சியில் தான் பேனர்களில் ஊழல் செய்துள்ளனர். ரூ.500 பல்பிற்கு ரூ.5,000 என பில் போட்டது எடப்பாடி பழனிசாமி அரசு. ஊழல் செய்வதையே முழு நேரமாக செய்து வந்தவர்கள் அவர்கள். மாநில அரசு பெற வேண்டிய நிதிகளை பெற முடியாமல் கேடு விளைவித்த ஆட்சிதான் எடப்பாடி பழனிசாமி ஆட்சி என்றார்.



Next Story