அ.தி.மு.க.வின் தொடர் தோல்விக்கு எடப்பாடி பழனிசாமி தான் காரணம் - டி.டி.வி.தினகரன் விமர்சனம்


அ.தி.மு.க.வின் தொடர் தோல்விக்கு எடப்பாடி பழனிசாமி தான் காரணம்  - டி.டி.வி.தினகரன் விமர்சனம்
x

அதிமுகவின் இது போன்ற தொடர் தோல்விக்கு எடப்பாடி பழனிசாமி மட்டும் தான் காரணம் என டி.டி.வி. தினகரன் கூறினார்.

சென்னை,

அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இரட்டை இலை இல்லை என்றால் அ.தி.மு.க.வின் நிலைமை இன்னும் மோசமாகி இருக்கும். அ.தி.மு.க.வின் தொடர் தோல்விக்கு எடப்பாடி பழனிசாமிதான் காரணம். எடப்பாடி பழனிசாமியின் ஆணவம் தான் தோல்விக்கு காரணம்.

கடந்த காலத்தில் மத்திய அரசில் இருந்தவர்களால் தான் எடப்பாடி பழனிசாமி ஆட்சி காப்பாற்றப்பட்டு வந்தது. எவ்வளவோ பணம் செலவு செய்தும், பொருட்களை செலவு செய்தும் எடப்பாடி பழனிசாமியால் வெற்றி பெற முடியவில்லை. ஈரோடு கிழக்கு தொகுதியில் தி.மு.க. பெற்ற வெற்றி வழங்கப்பட்டதல்ல, வாங்கப்பட்டது. அதிமுகவின் இது போன்ற தொடர் தோல்விக்கு எடப்பாடி பழனிசாமி மட்டும் தான் காரணம். அவர் தலைமையில் அதிமுகவில் இணைய வாய்ப்பில்லை. தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் தர்மமே மீண்டும் வெல்லும் என கூறினார்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story