எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் கடிதங்களை இதுவரை படிக்கவில்லை-சபாநாயகர் அப்பாவு பேட்டி


எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் கடிதங்களை இதுவரை படிக்கவில்லை-சபாநாயகர் அப்பாவு பேட்டி
x

எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் கடிதங்களை இதுவரை படிக்கவில்லை என்று சபாநாயகர் அப்பாவு கூறினார்.

திருநெல்வேலி

களக்காடு:

நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியில் வாழைத்தார் ஏல மையம் அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. இதில் சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பேசினார்.

பின்னர் அவரிடம், அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கொடுத்துள்ள கடிதம் குறித்து நிருபர்கள் கேட்டனர்.

அதற்கு பதில் அளித்து அவர் கூறும்போது, 'நான் இங்கு இருக்கிறேன். கடிதங்களை இதுவரை படிக்கவில்லை. ஆளுக்கு 2 கடிதங்கள் கொடுத்துள்ளனர். அவை எனது பரிசீலனையில் உள்ளது. நான் சென்னை சென்றதும், கடிதங்களை படித்து பார்த்து நியாயமான முறையில் தீர்வு காண நடவடிக்கை எடுப்பேன்' என்றார்.


Next Story