எடப்பாடி பழனிசாமி இன்று அ.தி.மு.க. அலுவலகம் செல்கிறார்


எடப்பாடி பழனிசாமி இன்று அ.தி.மு.க. அலுவலகம் செல்கிறார்
x
தினத்தந்தி 8 Sept 2022 4:59 AM IST (Updated: 8 Sept 2022 5:16 AM IST)
t-max-icont-min-icon

எடப்பாடி பழனிசாமி இன்று அ.தி.மு.க. அலுவலகம் செல்கிறார்.

சென்னை,

கடந்த ஜூலை மாதம் 11-ந்தேதி அ.தி.மு.க. பொதுக்குழுவில் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த நேரத்தில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் ஓ.பன்னீர்செல்வம்-எடப்பாடி பழனிசாமி தரப்புக்கும் இடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து அலுவலகத்துக்கு 'சீல்' வைக்கப்பட்டது. பின்னர் ஐகோர்ட்டு உத்தரவின்படி அந்த 'சீல்' அகற்றப்பட்டு, சாவி எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் ஒப்படைக்கப்பட்டது.

இருப்பினும் அவர் தலைமை அலுவலகத்திற்கு வரவில்லை. இந்த நிலையில் அவர் இன்று (வியாழக்கிழமை) கட்சி அலுவலகத்திற்கு வருகிறார். காலை 10 மணிக்கு கட்சி அலுவலகம் வரும் எடப்பாடி பழனிசாமி அங்குள்ள எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.

இந்த நிகழ்ச்சியில் நிர்வாகிகள், தொண்டர்கள் பெருமளவில் பங்கேற்க வேண்டும் என அ.தி.மு.க. தலைமைக்கழகம் பெயரில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Next Story