கல்வி விழிப்புணர்வு மாநாடு


கல்வி விழிப்புணர்வு மாநாடு
x
தினத்தந்தி 7 July 2023 12:15 AM IST (Updated: 7 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

புளியங்குடியில் கல்வி விழிப்புணர்வு மாநாடு நடந்தது.

தென்காசி

புளியங்குடி:

புளியங்குடி அத் தக்வா மகளிர் அரபிக் கல்லூரி ஆலிமா முபல்லிகா பட்டமளிப்பு விழா மற்றும் கல்வி விழிப்புணர்வு மாநாடு நடந்தது. அத் தக்வா பள்ளிவாசல் தலைவர் செய்யது அலி தலைமை தாங்கினார். மேல பள்ளிவாசல் ஜமாத் கமிட்டி தலைவர் மவுலல் கவுமி, முன்னாள் ஜமாத் கமிட்டி தலைவர் முகம்மது இஸ்மாயில், இந்திய யூனியன் முஸ்லிம் மாவட்ட தலைவர் செய்யது சுலைமான், புளியங்குடி நகர தலைவர் அப்துல் ரகுமான், ஜமாலியா பள்ளிவாசல் தலைவர் காஜா முகைதீன், தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட செயலாளர் முகைதீன், எஸ்.டி.பி.ஐ. கட்சி நகர தலைவர் அகமது, பார்ட் அறக்கட்டளை நிறுவனர் முகைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தக்வா பாதுஷா வரவேற்று பேசினார். கமாலுதீன் மதனி வாழ்த்தி பேசினார். நாகப்பட்டினம் எம்.எல்.ஏ. ஆளூர் ஷாநவாஸ் கலந்து கொண்டு, பட்டங்களை வழங்கி பேசினார். முஸ்லிம் லீக் மாவட்ட துணை செயலாளர் அப்துல் வஹாப், வழக்கறிஞர் அணி ஜாகிர் அப்பாஸ், நகர செயலாளர் ஷேக் காதர் மைதீன், நகர பொருளாளர் முகம்மது அப்துல் காதர் மற்றும் ஜமாத் கமிட்டி உறுப்பினர்கள், நகர்மன்ற உறுப்பினர்கள் முகம்மது நயினார், அப்துல் காதர், காதர் மைதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர். யாசர் அரபாத் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். செய்யது அலி பாதுஷா நன்றி கூறினார்.

1 More update

Next Story