மாணவர்களுக்கு கல்வியும்-காவலும் விழிப்புணர்வு


மாணவர்களுக்கு கல்வியும்-காவலும் விழிப்புணர்வு
x

மாணவர்களுக்கு கல்வியும்-காவலும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளாதேவியின் உத்தரவின்படி பள்ளி மாணவ-மாணவிகளுக்கு 'கல்வியும், காவலும்' என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி பள்ளிகளில், அந்தந்த போலீஸ் நிலைய பொறுப்பு அதிகாரிகளின் தலைமையில் மாணவ-மாணவிகளுக்கு கல்வியும், காவலும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மாணவ-மாணவிகளிடம் போதை பொருட்கள் உபயோகிப்பதனால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு, போக்குவரத்து விதிகளை பின்பற்றுதல், நீர் நிலைகளில் குளிக்க செல்வதால் ஏற்படும் உயிரிழப்புகள் மற்றும் தற்கொலைகள் போன்றவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் மாணவ-மாணவிகளுக்கு காவல் துறையில் இயங்கும் விரல்ரேகை பிரிவு, மோப்ப நாய் படை பிரிவு, வெடிகுண்டு தடுப்பு பிரிவு, சைபர் குற்றங்கள் தடுப்பு பிரிவு மற்றும் காவல்துறையில் பயன்படுத்தப்படும் துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் குறித்து வகுப்புகள் எடுக்கப்பட்டது. மேலும் கல்வியின் முக்கியத்துவம் குறித்தும் நன்றாக படித்தால் மட்டுமே மாணவர்களாகிய நீங்கள் ஒவ்வொருவரும் நாளைய அரசு அதிகாரிகளாக முடியும் என்பதை குறித்தும் போலீசாரால் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


Next Story