வருகிற 5-ந் தேதி கலெக்டர் அலுவலகத்தில் கல்விக்கடன் முகாம்


வருகிற 5-ந் தேதி கலெக்டர் அலுவலகத்தில் கல்விக்கடன் முகாம்
x
தினத்தந்தி 24 Aug 2023 12:15 AM IST (Updated: 24 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை மாவட்டத்தில் அனைத்து வங்கிகளின் சார்பில் சிறப்பு கல்வி கடன் முகாம் வருகிற 5-ந் தேதி சிவகங்கையில் நடைபெற உள்ளது.

சிவகங்கை

சிவகங்கை மாவட்டத்தில் அனைத்து வங்கிகளின் சார்பில் சிறப்பு கல்வி கடன் முகாம் வருகிற 5-ந் தேதி சிவகங்கையில் நடைபெற உள்ளது.

கடன் முகாம்

சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:- மாவட்டத்தில் கல்லூரி பயிலும் மாணவர்களுக்கு பயனுள்ள வகையில், கல்வி கடன் முகாம்கள் சிவகங்கை கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் வருகின்ற 5-ந் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. அதேபோன்று 8-ந் தேதி காரைக்குடியில் கண்ணதாசன் மணிமண்டபத்தில் கல்வி கடன் முகாம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது..

எனவே, கல்விக்கடன் பெற விரும்பும் மாணவ, மாணவிகள் அனைவரும் www.vidyalakshmi.co.in என்ற இணையதளத்தில் தங்களுடைய விண்ணப்பத்தினை தேவைப்படும் ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்யலாம்.

ஆவணங்கள்

மேலும் முகாம் நடைபெறும் நாளன்று விண்ணப்பத்தின் நகல் மற்றும் கீழ்கண்ட ஆவணங்களுடன் கலந்து கொள்ள வேண்டும். இம்முகாம்களில் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் வங்கியின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு பரிசீலனை செய்து உடனடி கடன் ஆணைகளும் வழங்கப்படும். கல்வி கடன் பெற விரும்புபவர்கள் விண்ணப்பநகல், மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோரின் 2 புகைப்படம், வங்கி பாஸ் புத்தக நகல், இருப்பிட சான்று நகல், வருமான சான்று நகல், சாதி சான்று நகல், பான் கார்டு நகல், ஆதார் அட்டை நகல், கல்லூரியிலிருந்து பெறப்பட்ட சான்றிதழ், கல்விக்கட்டண விவரம், 10, 12-ம் வகுப்பு, இளநிலை பட்டப்படிப்பின் மதிப்பெண் சான்றிதழ்கள், முதல் பட்டதாரியாக இருப்பின் அதற்கான சான்று மற்றும் கலந்தாய்வு மூலமாக பெறப்பட்ட சேர்க்கைக்கான ஆணை உள்ளிட்ட ஆவணங்களுடன் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story