94 மாணவர்களுக்கு கல்விக்கடன் ஆணை


94 மாணவர்களுக்கு கல்விக்கடன் ஆணை
x

விருதுநகரில் நடைபெற்ற சிறப்பு முகாமில் 94 மாணவர்களுக்கு கல்விக் கடன் ஆணைகளை கலெக்டர் ஜெயசீலன் வழங்கினார்.

விருதுநகர்


விருதுநகரில் நடைபெற்ற சிறப்பு முகாமில் 94 மாணவர்களுக்கு கல்விக் கடன் ஆணைகளை கலெக்டர் ஜெயசீலன் வழங்கினார்.

சிறப்பு முகாம்

விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி கலையரங்கில் மாவட்ட நிர்வாகம், மாவட்ட முன்னோடி வங்கி மற்றும் அனைத்து வங்கிகளின் சார்பில் சிறப்பு கல்வி கடன் முகாம் கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது. இந்தநிகழ்ச்சியில் கலெக்டர் ஜெயசீலன் கூறியதாவது:-

மத்திய, மாநில அரசுகள் உயர் கல்வி பெறுவதற்காக மாணவர்களுக்கு பல்வேறு வசதிகள் மற்றும் வாய்ப்புகளை தந்து இருக்கிறது. அதிலும் குறிப்பாக தொழில் கல்வி, மருத்துவம், வேளாண்மை அறிவியல், சட்டம் போன்ற பல்வேறு மேற்படிப்புகளில் அதிலும் குறிப்பாக முதல் தலைமுறை பட்டதாரிகள், உயர் கல்வி வாய்ப்புகளுக்கு சென்று கல்வியின் மூலம் சமூக பொருளாதார உயர்வினை அடைவதற்காக பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.

வழிகாட்டுதல்

பொருளாதார காரணங்களால் மாணவர்களுடைய உயர்கல்வி படிப்பில் எந்த பிரச்சினையும் வந்துவிடக்கூடாது என்பதற்காக கல்வி உதவித்தொகை, கல்லூரி கட்டணம், விடுதி கட்டணம் ஆகியவற்றை ஈடு செய்வதற்காக பல்வேறு பொதுத்துறை வங்கிகள் மற்றும் மாநில அரசின் முன்னெடுப்பின் காரணமாக இந்த நிகழ்ச்சி ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளது. மாணவர்களுக்கு எந்தவிதமான சிரமமும் இன்றி வழிகாட்டுதல் மற்றும் கடன்களை பெறுவதில் சில நடைமுறை சிக்கல்களை களைந்து அவர்களுக்கு விரைவாக அவர்களுடைய தகவல்களையும் பெற்று இணையதளத்தில் பதிவு செய்து மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர், அனைத்து வங்கி மேலாளர்கள் ஆகியோரின் முழுமையான ஒத்துழைப்போடு ஒரே இடத்தில் வங்கி கடன் வழங்குவதற்காக இந்த கல்வி கடன் முகாம் நடைபெறுகிறது.

கல்வி கடன் முகாம் மாதம் ஒருமுறை நடைபெறும். தற்போது பங்கு பெறாத மாணவர்கள் அடுத்த மாதங்களில் நடைபெறும் முகாமில் பங்கு பெற்று பயன்பெறலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

முகாமில் 114 மாணவர்களிடமிருந்து ரூ.4.88 கோடி கல்விக்கடன் பெறுவதற்காக விண்ணப்பங்கள் பெறப்பட்டு இதில் 94 மாணவர்களுக்கு ரூ. 4.13 கோடி கல்வி கடன் பெறுவதற்கான உத்தரவுகளை கலெக்டர் ஜெயசீலன் வழங்கினார்.


Related Tags :
Next Story