கல்லூரி மாணவர்களுக்கு 11-ந் தேதி கல்வி கடன் சிறப்பு முகாம்
கல்லூரி மாணவர்களுக்கு கல்வி கடன் சிறப்பு முகாம் 11-ந் தேதி நடக்கிறது,
கல்லூரி மாணவர்களுக்கு கல்வி கடன் சிறப்பு முகாம் 11-ந் தேதி நடக்கிறது,
திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசினர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் வருகிற 11-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு கல்விக் கடன் சிறப்பு முகாம் நடக்கிறது. இந்த முகாமில் கலந்து கொள்ள விரும்பும் மாணவ, மாணவிகள் தங்களின் ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, பான் கார்டு, மாற்றுச்சான்றிதழ், 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், கல்லூரி சேர்க்கை கடிதம், கல்லூரி கட்டணம் சான்று ஆகியவற்றின் நகல்களுடன் முகாம் நடைபெறும் இடத்திற்கு பெற்றோருடன் வர வேண்டும்.
இந்த முகாமில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் கல்விக் கடன் விண்ணப்பங்களை நேரடியாக பெற்று தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு விரைவில் கடன் வழங்க மாவட்ட நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தை சார்ந்த மாணவ, மாணவிகள் இந்த சிறப்பு கல்விக் கடன் முகாமில் உரிய ஆவணங்களுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம் என கலெக்டர் முருகேஷ் தெரிவித்து உள்ளார்.