பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி
பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
சிவகாசி
சிவகாசி பி.எஸ்.ஆர். கல்லூரி, பள்ளி கல்வித்துறையும் இணைந்து பிளஸ்-2 மாணவ, மாணவிகளுக்கு தேர்வு பயம் நீங்க தேர்வை கொண்டாடுவோம் என்ற தலைப்பில் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி கடந்த 6 நாட்களாக நடைபெற்றது. இதில் விருதுநகர், தென்காசி, ெநல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த சுமார் 25 ஆயிரம் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். கடைசி நாள் நிகழ்ச்சியான நேற்று கல்லூரியின் இயக்குனர் விக்னேஷ்வரி அருண் குமார் தலைமை தாங்கினார். கல்லூரியின் முதல்வர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். டீன் மாரிச்சாமி வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ராமன், நடிகர் தாமு ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் நடிகர் தாமு பேசியதாவது, தன்னம்பிக்கை, விடா முயற்சி, நேரம் தவறாமை, ஆரோக்கியமான உடல்நிலை, பெற்றோர் மற்றும் ஆசிரியர்களை மதிக்கும் குணம் கொண்ட மாணவ-மாணவிகள் உயர்ந்த நிலைக்கு செல்வார்கள் என்றார். நிகழ்ச்சியில் விருதுநகர், தென்காசி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், கல்வித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பி.எஸ்.ஆர். கல்லூரியின் தாளாளர் சோலைசாமி செய்திருந்தார்.