மாணவர்கள் வழிகாட்டி கல்வி கண்காட்சி


மாணவர்கள் வழிகாட்டி கல்வி கண்காட்சி
x

தர்மபுரியில், விஜய்ஸ் இன்போ மீடியா சார்பில் மாணவர்கள் வழிகாட்டி கல்வி கண்காட்சி நடந்தது.

தர்மபுரி

தர்மபுரி:

தர்மபுரி விஜய்ஸ் இன்போ மீடியா, பெங்களூர் ஜெயின் பல்கலைக்கழகம், கோவை இந்துஸ்தான் கல்வி நிறுவனங்கள், கே.எம்.சி.எச். கல்வி நிறுவனங்கள், கற்பகம் கல்வி நிறுவனங்கள், சேலம் விநாயகா மிஷன்ஸ் கல்வி ஆராய்ச்சி நிறுவனங்கள், சென்னை மெட்ராஸ் இன்ஸ்டியூட் ஆப் ஹோட்டல் மேனேஜ்மென்ட், சென்னை இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி மற்றும் எக்ஸல் கல்வி நிறுவனங்கள் இணைந்து நடத்தும் மாணவர்கள் வழிகாட்டி கல்வி கண்காட்சி தர்மபுரி அதியமான் அரண்மனையில் நேற்று தொடங்கியது. இந்த கண்காட்சியில் மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் ஏராளமானோர் பார்வையிட்டனர். கண்காட்சியில் மருத்துவம், பொறியியல், அக்ரி, மெரைன், ஹோட்டல் மேனேஜ்மென்ட், ஏவியேஷன், தீ தடுப்பு மற்றும் பாதுகாப்பு, அனிமேஷன் நர்சிங் பார்மசி, அலைடு சயின்ஸ் படிப்புகளுக்கான பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் கலந்து கொண்டன.

மாணவ-மாணவிகள் 12-ம் வகுப்பு, டிகிரி, டிப்ளமோ முடித்து அடுத்து என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? எந்த பாடப்பிரிவு படித்தால் வேலை வாய்ப்பு கிடைக்கும், நீட் மற்றும் ஜே.இ.இ. தேர்வை எதிர்கொள்வது எப்படி? அரசு மற்றும் தனியார் கல்வி உதவித்தொகை பெறுவது எப்படி? அண்ணா பல்கலைக்கழக பொறியியல் ஆன்லைன் கலந்தாய்விற்கு விண்ணப்பிப்பது எப்படி? என்பது குறித்து சிறந்த கல்வியாளர்களை கொண்டு விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த கண்காட்சியில் எம்.பி.பி.எஸ். மற்றும் அக்ரி பாடப்பிரிவில் நன்கொடை இல்லாமல் படிப்பது எப்படி? 100 சதவீத வேலை வாய்ப்புகளைப் பெற்றுத்தரும் படிப்புகள் எவை? இதுபோன்ற பல்வேறு சந்தேகங்களுக்கு விடையளிக்கும் வகையில் இந்த கண்காட்சியில் 30-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த கண்காட்சிக்கு

வந்த மாணவ-மாணவிகளுக்கு குலுக்கல் முறையில் பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் அனைத்து மாணவர்களுக்கும் கல்வி வழிகாட்டி புத்தகம் இலவசமாக வழங்கப்பட்டது. இந்த கண்காட்சி இன்றும் (வியாழக்கிழமை) தொடர்ந்து மாலை வரை நடக்கிறது.எனவே மாணவ, மாணவிகள் இந்தக் கல்விக் கண்காட்சியை பார்வையிட்டு பயன்பெறுமாறு தர்மபுரி விஜய்ஸ் இன்போ மீடியா இயக்குனர் ஆர். சதீஷ் கேட்டு கொண்டுள்ளார்.


Next Story