அரசு பள்ளிக்கு பெற்றோர் வழங்கிய கல்வி சீர்வரிசை


அரசு பள்ளிக்கு பெற்றோர் வழங்கிய கல்வி சீர்வரிசை
x
தினத்தந்தி 31 March 2023 12:15 AM IST (Updated: 31 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

முதுகுளத்தூர் அருகே அரசு பள்ளிக்கு கல்வி சீர்வரிசை பெற்றோர் வழங்கினர்.

ராமநாதபுரம்

முதுகுளத்தூர்,

முதுகுளத்தூர் அருகே பெரிய கையகம் கிராமத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது.இப்பள்ளியின் 68-ம் ஆண்டு விழாவை முன்னிட்டு அரசுப் பள்ளியை மேம்படுத்தும் நோக்கில் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர் அனைவரும் ஒன்றிணைந்து பள்ளிக்கு தேவையான சேர், கட்டில், மின்விசிறி, ஒலிபெருக்கி, குடம், நோட்டு, புத்தகம், சிலேட், பக்கெட் உள்ளிட்ட பல்வேறு வகையான ரூ.50 ஆயிரம் மதிப்பிலான கல்வி சீர்வரிசை பொருட்களை பெற்றோர் மேளதாள இசை வாத்தியங்களுடன் ஊர்வலமாக கொண்டு சென்று பள்ளிக்கு வழங்கினார்கள்.

அதன் பின்னர் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் அரசு பள்ளி மாணவ-மாணவிகள் கிராமிய பாடல்களுக்கு நடனமாடி அசத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் சகாயம், முதுகுளத்தூர் வட்டார கல்வி அலுவலர் வேல்முருகன், வட்டார வளமைய மேற்பார்வையாளர் மோகனவள்ளி, மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் பேராசிரியர் சண்முகவேல், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் அய்யாச்சாமி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.


Related Tags :
Next Story