பள்ளி மாணவர்கள் கல்வி சுற்றுலா


பள்ளி மாணவர்கள் கல்வி சுற்றுலா
x

சுரண்டை பள்ளி மாணவர்கள் கல்வி சுற்றுலா சென்றனர்.

தென்காசி

சுரண்டை:

சுரண்டை எஸ்.ஆர். ஸ்கூல் ஆப் எக்சலன்ஸ் பள்ளி மாணவர்கள் வட இந்தியாவிற்கு கல்விச் சுற்றுலா சென்று வந்தனர். குழல்வாய்மொழி அம்மாள் சிவன் நாடார் அறக்கட்டளை நிறுவனர் சிவபபிஸ்ராம், பள்ளி முதல்வர் பொன்மனோன்யா ஆகியோர் தலைமையில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பள்ளி செயலாளர் சிவடிப்ஜினிஸ்ராம், தலைமையாசிரியர் மாரிக்கனி ஆகியோர் செய்திருந்தனர். ஆசிரியர்கள் கிருஷ்ணகுமார், சாம் அலக்ஸாண்டர், ரேவதி, ரவின்சா, சுப்புலெட்சுமி ஆகியோர் மாணவ-மாணவியரை வழிநடத்தி சென்றனர். சுற்றுலாவில் இந்தியா கேட், குதுப்மினார், தாமரைஆலயம், பிர்லா கோவில், பழைய பாராளுமன்றம், புதிய பாராளுமன்றம், டெல்லி செங்கோட்டை, ஆக்ரா கோட்டை, ஜெய்ப்பூர் ஆல்பர்ட் அருங்காட்சியகம், நாராயணர்கோவில், அமீர்கோட்டை, முகலாய பேரரசின் போர்க்கருவிக் களம், தாஜ்மஹால், குதுப்மினார் மற்றும் கலாசார சந்தை ஆகிய இடங்களை பார்வையிட்டனர்.


Next Story