பெத்தநாயக்கனூர் அரசு பள்ளியில் திறம்பட கேள் நிகழ்ச்சி


பெத்தநாயக்கனூர் அரசு பள்ளியில் திறம்பட கேள் நிகழ்ச்சி
x

பெத்தநாயக்கனூர் அரசு பள்ளியில் திறம்பட கேள் நிகழ்ச்சி

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பொள்ளாச்சி அருகே பெத்தநாயக்கனூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் தமிழ் இலக்கிய மன்றம் மற்றும் தேசிய பசுமைப்படை சார்பில் கதை சொல்லல் என்ற தலைப்பில் திறம்பட கேள் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.

இதற்கு பள்ளி தலைமை ஆசிரியை உமாமகேஸ்வரி தலைமை தாங்கினார். இதில், பேச்சாளர் ஜமுனா கலந்து கொண்டு மாணவ- மாணவிகளுக்கு ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலை காப்பியத்தை கதையாக பேச்சு வழக்கில் கூறினார். 6-ம் வகுப்பு மாணவ-மாணவிகள் சுவேதா, சர்வேஷ், தர்ஷினி, சரவணா, தேஜஸ் ஸ்ரீ ஆகியோர் நூலகத்தில் உள்ள புத்தகங்களை வாசித்து கதைகளை கூறி அசத்தினர். தமிழாசிரியர் பாலமுருகன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.


Next Story