நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 5 காசுகள் உயர்வு-450 காசுகளாக நிர்ணயம்
நாமக்கல்:
நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 445 காசுகளாக இருந்து வந்தது. இந்தநிலையில் நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை 5 காசுகள் உயர்த்த முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை 450 காசுகளாக உயர்ந்து உள்ளது. இதேபோல் ஏற்றுமதி ரக முட்டையின் கொள்முதல் விலை 440 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
முட்டைக்கோழி கிலோ ரூ.83-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. நேற்று நாமக்கல்லில் நடந்த முட்டைக்கோழி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.5 உயர்த்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி முட்டைக்கோழி விலை கிலோ ரூ.88 ஆக அதிகரித்து உள்ளது. கறிக்கோழி கிலோ ரூ.105-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. நேற்று பல்லடத்தில் நடந்த கறிக்கோழி ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.1 உயர்த்த முடிவு செய்தனர். எனவே கறிக்கோழி விலை கிலோ ரூ.106 ஆக உயர்ந்து உள்ளது என பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.