சிகரெட் பாக்கெட்டுகளை திருடிய முட்டை வியாபாரி கைது


சிகரெட் பாக்கெட்டுகளை திருடிய முட்டை வியாபாரி கைது
x
தினத்தந்தி 29 May 2023 1:00 AM IST (Updated: 29 May 2023 1:01 AM IST)
t-max-icont-min-icon

சிகரெட் பாக்கெட்டுகளை திருடிய முட்டை வியாபாரி கைது

கோயம்புத்தூர்

பெரியகடைவீதி

கோவை கோணவாய்க்கால்பாளையம் பழனியாண்டவர் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெகதீஷ்வரன்(வயது 39). தனியார் நிறுவனத்தில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார். இவர் சில்லறை கடைகளுக்கு விற்பனை செய்வதற்காக ரூ.29 ஆயிரத்து 320 மதிப்பிலான சிகரெட் பாக்கெட்டுகளை தனது மோட்டார் சைக்கிளில் வைத்திருந்தார். கடந்த 16-ந் தேதி மோட்டார் சைக்கிளை வைசியாள் வீதியில் உள்ள நிறுவனம் முன்பு நிறுத்திவிட்டு உள்ளே சென்றார். பின்னர் சிறிது நேரம் கழித்து வெளியே வந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த 380 சிகரெட் பாக்கெட்டுகளை காணவில்லை. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த ஜெகதீஷ்வரன் அங்கிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தார். அப்போது மர்ம ஆசாமி ஒருவர் சிகரெட் பாக்கெட்டுகளை லாவகமாக திருடிச்சென்றது தெரியவந்தது. அப்போது போலீசில் புகார் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் ஜெகதீஸ்வரன் ஆர்.ஜி. தெருவில் சென்று கொண்டிருந்தார். அப்போது சிகரெட் பாக்கெட்டுகள் திருட்டில் ஈடுபட்ட ஆசாமி அங்கு நின்றிருந்தார். உடனே ஜெகதீஸ்வரன் தனது நண்பர்கள் உதவியுடன் அந்த ஆசாமியை பிடித்து பெரியகடைவீதி போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில், அவர் மதுக்கரை ரோடு எம்.ஜி.ஆர். தெருவை சேர்ந்த முட்டை வியாபாரி ஜான் பாண்டிராஜன் (34) என்பதும், சிகரெட் பாக்கெட்டுகளை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.


Next Story