முட்டை விலை 30 காசுகள் சரிவு


முட்டை விலை 30 காசுகள் சரிவு
x

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 30 காசுகள் குறைந்தது.

நாமக்கல்

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 435 காசுகளாக இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை அதிரடியாக 30 காசுகள் குறைக்க முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை 405 காசுகளாக சரிவடைந்து உள்ளது.

முட்டைக்கோழி கிலோ ரூ.77-க்கும், கறிக்கோழி கிலோ ரூ.107-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை என பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

பிற மண்டலங்களில் முட்டை கொள்முதல் விலை குறைந்து வருவதால், அதற்கு தகுந்தாற்போல் நாமக்கல் மண்டலத்திலும் முட்டையின் கொள்முதல் விலை குறைக்கப்பட்டு இருப்பதாக பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.


Next Story